Friday, July 17, 2009

பேச்சு படும் பாடு

வெளியூருக்கு ஒருவர் பஸ்ஸில் போய்க் கொண்டு இருந்தார். அந்த ஊருக்கு அவர் பழக்கம் இல்லாதவர். பயணத்தின் போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த சக பயணியிடம் அந்த ரைப் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டார்.

எனவே அவரிடம் தன்னை அறிமுகப்ப்படுத்தி கொண்டார். தான் அந்த ஊருக்கு போகும் நோக்கம், எத்தனை நாள் அங்கு தங்க இருக்கிறார், தங்குவதற்கு ஏற்ற விடுதி அங்கு எங்கு உள்ளது, அந்த ஊரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்பது பற்றி அவரிடம் தெரிந்துக் கொள்ள அவரிடம் தகவல்களை கேட்டார்.

இவர் சொன்னதை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்ட அந்த சகப் பயணி , மெதுவாக அந்த நபரிடம் சொன்னார், சார் நான் கூட அந்த ஊருக்கு போகறது இது தான் முதல் முறை. இதபத்தி எல்லாம் என்கிட்ட கேட்கறிங்களே என்றாராம்.

இப்படித் தான் நம்மில் பலர் யாரிடம் எதைப் பேசவேண்டும் என்று தெரியாது தங்களை குழப்பிக் கொள்வதோடு தேவை இல்லாமல் மற்றவர்களையும் குழப்பி விடுகிறார்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் , பேச கூடாத இடத்தில் பேசியும் பலர் காலத்தை வீனக்குகிறார்கள்....

பேச்சு என்பது மனித இனத்திற்கே உரிய சொத்து. அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால் , அதற்கு ஊமையாகவே பிறந்து இருக்கலாம். சாதூர்யமான பேச்சால் சங்கடங்கள் தீரும். தேவை இல்லாத பேச்சினால் சங்கடங்கள் உருவாகும்.

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம் நாம் எதை பேச வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்காவிட்டாலும், எதை பேசக்கூடாது என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். யாரிடம் பேச வேண்டும் என்று தெரியாவிட்டாலும் , யாரிடம் பேச கூடாது என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பேசத் தகுந்த மனிதர் கிடைத்து, நீங்கள்
பேச தவறினால் ஒரு தகுதியான
மனிதரை இழந்து விட்டீர்கள்....
பேச தகுதி இல்லாத மனிதரிடம் நீங்கள்
பேசிக் கொண்டே இருந்தால் நீங்கள்
உங்களையே இழந்து விட்டீர்கள்....

No comments:

Post a Comment