Tuesday, June 16, 2009

ஹை கூ பூக்கள்















*ஓடி விளையாடு பாப்பா என
உரக்க பாடுகிறார்கள்
போலியோ குழந்தைகள் ....

*கண்ணகி வேடத்தில் சிறப்பாக
நடிக்கும் மாதவி
சினிமா நடிகை .....

*மகளுக்கு வரன் தேடி
நெடும் காலமாய் அலைகிறார்
திருமண தரகர்.....

*இனி வேலைக்கு வராதே
வேலைகாரியிடம் அம்மா - நாளைக்கு
என் திருமணம் ....

*மகனின் பிறந்த நாள்
வேண்டிக் கொள்ளும் பெற்றோர்கள்
முதியோர் இல்லத்திலிருந்து....


*பெண்கள் ஏலத்தில் விற்பனை
பெயர் மட்டும் நாகரிகமாய்
திருமணம் என்று.....



No comments:

Post a Comment