
செந்நிற திரவமென்று நினைதிடாதே தோழா
செந்நிற குருதியன்றோ போகிறது பாழா .........
சொன்னால் புரிந்து கொள்ளடா தோழா
சொந்தங்களுக்கு பதில் சொல்லடா தோழா.........
குடித்து குடித்து நீ கும்மாளமிடுவாய்
குடும்பத்தில் பல குழப்பங்களை விளைவித்திடுவாய்.......
அடுத்தவர் அமைதி நீ கெடுப்பாய்
அவதிகள் பலவும் நீ கொடுப்பாய்...........
நீ குடித்தாய் மதுவை போதைக்காக
நீடித்தால் காத்திருப்பாய் மரண பாதைக்காக..........
போதை பெரிதாக தெரியும் உனக்கின்று
பொன்னான வாழ்வு சிறிதாகும் உனக்கிங்கு..........
உடலுக்குள் உனக்கு எண்ணற்ற கோளாறுகள்
ஊரெங்கும் உன்னால் எதற்கும் தகராறுகள் ...........
குடலுக்குள் உனக்கு பல குழப்பங்கள்
குடிப்பதனால் உடலுக்குள் பல உபாதைகள்.........
குடிக்கின்ற மனிதனின் பொன்னான உயிர்
குடிக்கப்படும் ஒரு நாள் அவசரமாய் ..........
சுடுகாட்டுக்கு சிக்கிரமாய் நீ போவதில்
சுகம் என்ன இருக்கு உனக்கு...........
திருந்தினால் மறுவாழ்வு உனக்கு உண்டு
திருந்திடும் நாள் தான் என்று.............
திருந்திட்டு மனிதனாய் மாறிடு இன்று
திருந்திடு நல்ல மனம் கொண்டு.........
No comments:
Post a Comment