
எதையோ நினைத்து உள்ளம்
ஊர் சுற்றும்....
மறக்காமல் உன் நினைவுகளை
சுமந்து செல்லும் ....
என் பசுமை மாறா காலமே
அந்த பக்கங்களை வாசிக்கிறேன்...
இமை வேலியை தகர்த்துக்கொண்டு
எட்டிப்பார்க்கும் கண்ணீர் மந்தைகள்....
நினைவுகளோடு நான் செல்லும்
நிகழ்கால யாத்திரை....
இறந்த காலமே நான்
பயணிக்கும் பாதைகள் ....
உறங்காத இரவோடு கலந்திட
துடிக்கும் அந்த நினைவுகள்....
என் உயிர் காற்றின் உறவே
பின்னோக்கி நடக்கிறேன்....
களைந்து விடாத அந்நினைவை
கண்மூடி சுவாசிக்கிறேன் ....
என் எதிர்காலம் பரிசாக்கிய
என் நிகழ்காலம் நீ.....
உன் நினைவை பின்னி
வாழும் சிலந்தியாய் நான்....
சிறகை விரிக்கிறேன் நான்
உன் நினைவை சுமந்த படி.....
No comments:
Post a Comment