Monday, June 15, 2009

பெண்


பெண்
தந்தைக்கு வேண்டா தலைவலி
தாய்க்கு மடி மீது கட்டிய நெருப்பு
சகோதரனுக்கு
செல்வத்தின் செலவு
சமுதாயத்திற்கு
போக பொருள்
கணவனுக்கு
இன்பமளிக்கும் கருவி
மாமனாருக்கு சொந்தமாய் ஒரு வங்கி
மாமியாருக்கு
கூலி இல்லாத வேலைக்காரி
குழந்தைகளுக்கு
உலகை காணும் சாதனம்
அப்பப்பா
எத்தனை அவதாரங்கள்?
ஆண்டவன்
அவதாரம் எடுத்தால்
தீயவைகளை அழிக்க தானே!
இத்தனை
அவதாரம் எடுக்கும்
பெண்ணும்
தெய்வம் தானே!
ஆனால்
இவள் மட்டும் ஏன்
அழிந்து
போகிறாள்?

No comments:

Post a Comment