Tuesday, June 16, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே.......













ஈழத்தில் என் தமிழன்
உயிர் காக்கைக்கும் கழுகுக்குமா...
கொத்துக் குண்டுகள் வீசி
கொத்து
கொத்தாய் என் இனம்
மடிந்ததை கண்டும்....
நெஞ்சு
பொறுக்கவில்லையா
நிலை
கெட்ட மாந்தர்களே...
பச்சிளம்
குழந்தைகளை கொன்று
உங்கள்
இனப்பசி அடக்கிய
ஈனப்
பிறவிகளே...
தமிழனின்
கண்ணீருக்கு
நீ பதில் சொல்லும்
காலம் வரும்...
அன்று
ஈழம் மலரும்
எங்கள்
இதயம் குளிரும்....








No comments:

Post a Comment