Wednesday, June 17, 2009

படித்ததில் பிடித்தது

*இவர்கள் தூவும்
விதைக்கு மட்டும்
புதைத்த பிறகும் உயிரிருக்கிறது
இவர்கள் வாழ்வோ
உயிரிருக்கும் போதே
புதைந்து போகிறது...
(ஏழ்மையின் மனித நேயம் - திருத்தி எழுதிய தீர்ப்புகள் - வைரமுத்து)

*ஒருவன் தனக்காக அழும் கண்ணீர்
அவனை மட்டுமே சுத்திகரிக்கிறது
அடுத்த உயிருக்காக அழும் கண்ணீர்
அகிலத்தையே சுத்திகரிக்கிறது....
(கண்ணீர் தேசம் - வைரமுத்து)

*இந்திய மண்ணிலே
வியாபாரஞ் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள் !
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரஞ் செய்கிறார்கள் !
இரண்டிலும்
நாட்டப்பட்டது மட்டும்
நாம் தானே இந்தியனே....
(திருத்தி எழுதிய தீர்ப்புகள் - வைரமுத்து)

* ஒரு இதயம் உடையாமல் நிறுத்த முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல
ஒரு உயிரின் தவிப்பையோ
ஒரு வலியையோ குறைக்க முடிந்தால்
ஏன் சோர்ந்து விழும் ஒரு பறவையை
கூட்டுக்கு மீட்க உதவினால்
நான் வாழ்வது வீணல்ல....
(எமிலி டிகின்சன்)

* புரட்சியின் இறவாத்தன்மையை எண்ணி
மகிழ்கிறேன்....

( புரட்சியாளர் சே குவேரா தனது மரணத்திற்கு முன் சொன்னது)

No comments:

Post a Comment