Thursday, June 18, 2009

எண்ணங்கள்

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு பைத்தியக்காரன் குப்பை வண்டியை தலைகீழாக கவிழ்த்து ஓட்டி வந்தான்.

அதைப் பார்த்ததும் மற்றவர்கள், "ஏண்டா இப்படி தலைகீழா வண்டியை ஓட்டற?" என்று கேட்டாங்க...

உடனே அவன் "நேத்து நேராத்தான் ஒட்டிட்டு வந்தேன், எல்லாரும் அவங்க அவங்க குப்பைய இந்த வண்டியில போட்டுட்டாங்கன்னு சொன்னான்".

வன் பைத்தியமாக இருந்தாலும் மத்தவங்க குப்பைய தன்னோட வண்டியில போடக் கூடதின்றதுல தெளிவோடுத் தான் இருந்திருக்கான்.

ஆனால் நல்ல தெளிவோடு இருக்கிற நாம என்ன செய்யரோமுனு பார்த்தால், போகிறவங்க, வரவங்க எல்லாம் அவங்கவங்க குப்பைகள நமக்குள் தள்ளிவிட அநுமதித்து விட்டு தெளிவான நம் மனதை குப்பை ஆக்கிக்கொள்கிறோம்.

இப்படி மனம் குப்பை கிடங்காக இருக்காதிருக்க நாம் நம் உள்ளத்தை தெளிவாக வைக்க வேண்டும். மத்தவங்களிடம் பேசும் பொது ரொம்ப கவனமா இருக்க வேணும். தேவையானத மட்டும் பேசணும். ஆக்கப்பூர்வமானதை மட்டும் பேசணும். எதிர்மறையான நம்மை பாதிக்கற விஷயத்தை மத்தவங்க நம்மகிட்ட பேச அனுமதிக்க கூடாது.

நாம கேட்கற, பேசற எதிர்மறையான விஷயங்கள் நம்ம மனநிலையை பாதிக்கும் என்றால், அந்த விஷயத்தை நம்ம மனசுக்குள்ள அனுமதிக்க கூடாது. தேவையில்லாத விஷயங்கள், பிறர் நம்மைப் பற்றி சொன்ன குறை பாடுகளை திரும்பத் திரும்ப நினைக்கக் கூடாது.

ஏதாவது ஒன்றை நாம் செய்தால், அதில் நாம் எதிர்பார்க்கும் நன்மைகளை மட்டுமே நினைக்க வேண்டும் . நாம அந்த செயலை செய்வதற்கு முன்னர் மத்தவங்க அந்த செயல பத்தி சொன்ன குறைகள நெனைக்க கூடாது . ஏன் என்றால் அந்த குறைகள் எல்லாம் குப்பை போல. அந்த குறைகள நம்ம மனசுக்குள்ள போட்டு குழப்பி கொள்வதற்கு பதில் பைத்தியக்காரனாகவே இருந்துட்டு போகலாம்.

நிம்மதியின் வெளிச்சம் அவரவர் கையில் - அது
அணைவதும் ஒளிர்வதும் அவரவர் மனதில்...

ஆக மனதை தேவை இல்லாம மத்தவங்க சொல் பேச்சு கேட்டு குழப்பி கொள்ளாம பார்த்துக் கொண்டாலே போதும் நிம்மதியான வாழ்கைய நாம் பெற முடியும்.

No comments:

Post a Comment